People comments about GST is in Mersal - pa. ranjith

மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் மக்களின் கருத்தை தான் பிரதிபலிக்கின்றன என்று இயக்குநர் பா.இரஞ்ஜித் ஒரே போடாய் போட்டார்.

பலவற்று தடைகளைத் தாண்டி மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்த நிலையில், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை, பொன்.ஆர் போன்ற பாஜகவினர் அலறிக் கொண்டு இருக்கின்றனர். பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், “மெர்சலில் இடம் பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மக்களின் கருத்துகளைத்தான் பிரதிபலிக்கின்றன” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.