Pavani Reddy crying: நடிகை பாவனி ரெட்டி  அமீரிடம் இருந்து தப்பிக்க வழி இல்லாமல் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ, பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

நடிகை பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பாவினியின் முதல் திருணம்:

பாவினி கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். முதல் கணவரை இழந்து தவித்து வந்த பாவனி ரெட்டி இரண்டாவது திருமணமும் தடைபட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி:

 பிக் பாஸ் சீசன் 5ல், அதிக சர்ச்சைகளை சந்தித்த போட்டியாளர்கள் என்றால் அது பாவனி தான். அமீர் நெருக்கமாக பழகியது ரசிகர்களை கடுப்பேற்றியது. இருவரின் முத்த சர்ச்சை பெறும் விவாதத்தை கிளப்பியது. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற பாவனி, 3-வது இடத்தை பிடித்து அசத்தினார்.

பாவனி - அமீர் ஜோடி:

பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பாவனிக்கும் அமீருக்கும் காதல் இருக்கிறதா? என இல்லையா..? என்று பல்வேறு தரப்பினருக்கும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.

கண்ணீர் விட்டு கதறும் பாவினி:

இந்நிலையில், தற்போது பாவனி, அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.. தற்போது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடன அவரது ஜோடியும், நடன ஆசிரியருமான அமீர், பாவனியின் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்து நடனத்திற்கு பயிற்சி கொடுக்கிறார். கொடுமைகளை தாங்க முடியாமல் பாவனி கதறுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, அந்த வீடியோவை பார்த்து தொகுப்பாளினி பிரியங்கா "தம்பி" என கண்டிக்கும் தொனியில் ட்வீட் போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram