இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. இந்த படத்தில் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹரின் பிரிசண்டா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின்,  தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் சில்க் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களால் வெறித்தனமாக ரசிக்கப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்தது.  

இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16ம் தேதி வெளியாக உள்ள, 'பட்டாஸ்' படத்தின் புரமோஷன் பணிகளையும் சூடு பிடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க,  இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அப்பா தனுஷ் நம் மண்ணின் பெருமை பேசும் பாரம்பரிய கலையை கற்றுக் கொடுக்கும் வேடத்தில் நடித்துள்ளார். அதே போல் நடிகை சினேகா சில சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. மகன் தனுஷ், துரு துரு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் இதோ...