கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் கனவு, எப்படியாவது அஜித், விஜய், கமல், ரஜினி என குறிப்பிட்ட சில நடிகர்கள் படங்களில் நடித்து விட வேண்டும் என்பது தான். அதிலும் அஜித் மற்றும் விஜயுடன் நடிக்க பல இளம் நடிகைகள் தயாராக இருக்கிறார்கள். 

அதே போல் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கு அஜித்துடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும் என்ற ஆசையை வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பார்வதி, தான் பள்ளிப்பருவத்தில் இருந்தே அஜித்தை மனதுக்குள் காதலித்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

இது குறித்து அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில்... அஜித் என்றால் சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவரை நான் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வருகிறேன் அவர் தான் என் முதல் காதல் என்று கூட சொல்லலாம் என்று கூறியுள்ளார். 

மேலும் அஜித்துடன் 'என்னை அறிந்தால்'  படத்தில் நடித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.