‘இளையராஜா 75’ நிகழ்ச்சி நடக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தனது திடீர் ராஜினாமா குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து குமுறிக்கொண்டிருக்கிறார் இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன்.

இன்று காலை தனது தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் பதவியை காரணம் எத்வும் சொல்லாமல் ராஜினாமா செய்திருந்தார் பார்த்திபன். ராஜினாமாவுக்கான காரணம் கண்டிப்பாக இளையராஜா நிகழ்ச்சி தொடர்பானதாகவே இருக்கும் என யூகித்து நாம் வெளியிட்டிருந்த செய்தியை ஊர்ஜிதம் செய்திருக்கும் பார்த்திபன் ‘மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல’ என்கிற ரேஞ்சில் நிகழ்ச்சியில் அணிய வாங்கிய சட்டையை அயர்ன் பண்ணாமல் கூட வைத்திருக்கிறேன்’ என்று உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். பியானோ டிசைன் பொறிக்கப்பட்ட அந்த சட்டை பரிதாபமாக ஹேங்கரில் துக்கம் தாங்காமல் தொங்கிக்கொண்டிருக்கிறது.

மற்ற பதிவுகளில்...hemingWAY. சொல்வதாக One WAY ஆகவே இருக்கும் அன்பும் நட்பும்.
நாமும் Special என்பது மறந்து
நம் சுயம் பாதிக்கப்படும் போது
சங்கம் சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே!...

...சுயம் பாதிக்கப்படும் போது
சோறு மூன்றாம் பட்சமே!... இன்றைய இசைக்காக தைக்கப்பட்டு....
இஸ்திரிக்கப்படாமல் 
தொங்கிக் கொண்டிருக்கிறது!... என்று தொடர்ச்சியாக ஆதங்கப் பதிவுகள் இட்டுவருகிறார். ‘ராஜா 75’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆர்வமாக இருந்த பார்த்திபனை கடைசி நிமிடத்தில் விஷால் கழட்டி அந்தப் பொறுப்பை நடிகை ரோகினியிடம் ஒப்படைத்த காரணத்தால்தான் பார்த்திபன் இவ்வளவு பொங்கிக்கொண்டிருக்கிறாராம்.