‘துருவ நட்சத்திரமா? அது சிறுவயது குழந்தையாக இருந்தபோது நடித்த படம் என்று கலாய்த்திருந்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மீண்டும் தங்கள் படத்தைக் கலாய்த்திருப்பதால் கவலை அடைந்துள்ளனர் அப்படக்குழுவினர்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தொடங்கியபடம் ’துருவ நட்சத்திரம்’.ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

'துருவ நட்சத்திரம்' படத்துக்கு முன்பாக கவுதம் மேனன் தொடங்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் வெளியாகவில்லை. பைனான்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால், 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் தாமதம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறிய பார்த்திபன், "நான் சிறுவயதில் நடித்த படம்" என்று பேசியிருந்தார். இது படக்குழுவினர் மத்தியில் கவலையை உண்டாக்கியது. தற்போது மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தைக் கலாய்த்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ஒரு குறும்படத்தை வெளியிட்ட அவர் “’துருவ நட்சத்திரம்' படத்தின் உதவி இயக்குநர் பார்த்தியின் இயக்கத்தில் இது! இவர் இயக்குநராகும் போது 'துருவ நட்சத்திரம்' வெளியாக வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன். மேலும், பார்த்தி இயக்கியுள்ள குறும்படத்தையும் பகிர்ந்துள்ளார்

இந்த ட்வீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்தில் நடித்ததற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டு இப்படி மானத்தை வாங்குவது நியாயமா என்று கொந்தளித்து வருகின்றனர்.