மூன்று வருட இடைவெளிக்குப் பின் பார்த்திபன் இயக்கியுள்ள ‘ஒத்தச் செருப்பு சைஸ் 7’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுற்ற நிலையில் அதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுக்காக நடிகர் கமலையும், இயக்குநர் ஷங்கரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார்.

2106ல் வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்துக்குப்பின் பார்த்திபன் படம் எதுவும் இயக்காமல் நடிகராக மட்டும் வலம் வந்தார். ஜீ.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’வுக்கு அடுத்தபடியாக நாளை மறுநாள் வெளிவர இருக்கும் விஷாலின் ‘அயோக்யா’ படத்திலும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் குற்கியகால பட்ஜெட் படமாக பார்த்திபன் இயக்கிய படமான ‘ஒத்தச் செருப்பு’ ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில் கமல், ஷங்கர் இருவருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் பார்த்திபன்.

ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ படம் டிராப் ஆகிவிட்டது என்பது தொடங்கி அப்படம் குறித்து சுமார் 3 டஜன் வதந்திகள் இண்டஸ்ட்ரியில் நடமாடிவரும் நிலையில் அனைத்துச் செய்திகளுக்கும் இந்த மேடையில் பதில் கிடைக்கும் சுவாரசியத்திற்காகவே பார்த்திபன் அவர்கள் இருவரையும் அழைத்திருப்பதாகத் தெரிகிறது.