parthiban also met the meter interest problem
தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகர் பார்த்திபன். சமீப காலமாக சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவரான இவர் இயக்கி வெளிவந்த படங்கள் மிகவும் வித்தியாசமான கதை கொண்டவையாகவே இருக்கும், இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

பொதுவாக தயாரிப்பாளர்கள் பலர் எடுக்கும் படத்தை நம்பி கந்து வட்டிக்கு வாங்கி செலவு செய்வது போல் இவரும், இவர் தயாரித்து இயக்கிய படங்களுக்காக கந்து வட்டிக்கு வாங்கி கஷ்டப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... நான் சினிமா பைனான்சியர் பல பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கேன்.அதுல அன்பும் ஒருவர்! வாங்குன பணத்தை ஒத்துக்கிட்ட வட்டியோட சொன்ன தேதியில கொடுக்க, நான் முதன்முதலா வாங்குன பங்களாவைக் கூட வித்திருக்கேன்.ஆனா யார்கிட்டயும் தலை குனிஞ்சி நின்னதில்ல.

அந்த திமிர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் அது பிடிச்சிருக்கு.நாலு படத்தில நடிச்சி கடனை அடைச்சிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் ஏற்படுற இடைவெளி. நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு. மத்தபடி நான் சந்திக்கிற பிரச்சனைகளை சவாலாதான் எதிர்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
