ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

என்னது...? அஜித் படத்தில் நடிக்கவே மறுப்பா? யார் அந்த நடிகை தெரியுமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்டபார்வை. மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்ததால் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் வினோத், மீண்டும் அஜித் ஹீரோவாக நடிக்கும் "வலிமை" என்ற படத்தை இயக்க உள்ளார்.

இதன் பட பூஜை மிக எளிமையாக சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யும் வேலையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் எடுக்க உள்ளதாகவும், இதில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக பரிணிதி சோப்ராவிடம் கால்சீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே டென்னிஸ் வீராங்கனை சாய்னா வின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடித்து வருவதால் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளதால் மறுப்பு தெரிவித்துள்ளாராம் பிஸியான நடிகை