விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரியலை இயக்கி வருகிறார் இயக்குனர் சிவசேகர்.

இந்த சீரியலில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வரும் நடிகை சுஜிதா. மேலும் ஸ்டாலின், வி.ஜே.சித்திரா, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை சுஜிதாவிற்கும் நடிகை சித்திராவிற்கும் நடுவே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இவர்களின் இந்த சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டது, விஜய் டிவி நடத்திய விருது விழா தானாம். இந்த விழாவில், சிறந்த நடிகைக்கான நாமினேஷன் லிஸ்டில் சித்ரா பெயர் இருந்தது. ஆனால் சுஜிதாவுக்கு சப்போர்டிங் கேரக்டர் விருது மட்டுமே கொடுக்கப்பட்டது.

இதனால் இத்தனை நாள், தான் ஒரு ஹீரோயின் என நினைத்து கொண்டிருந்தா சுஜிதா இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு தற்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும், இதன் காரணமாக இரண்டு நடிகைகளில் ஒருவர் இந்த சீரியலை விட்டு வெளியேறும் நினைப்பில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.