பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்த விஜே சித்ரா இன்று அதிகாலை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹேமந்த் ரவி என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக நசரத்பேட்டை ஓட்டலில் தங்கிய சித்ராவுடன் வருங்கால கணவர்ஹேமந்த் ரவியுடன் தங்கியுள்ளார். ஆனால் சித்ரா குளிக்கச் செல்வதால் ஹேமந்த் ரவி வெளியே அனுப்பியதாகவும், அதன் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது சித்ராவின் சடலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி அன்று, சித்ராவிற்கும் தொழிலதிபர் ஹேமந்த் ரவிக்கும்  பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மணப்பெண் இறந்தால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஓட்டல் அறையில் ஒன்றாக தங்கியிருந்த சித்ரா, ஹேமந்த் ரவி இடையே ஏதேனும் பிரச்சனை வெடித்ததா? அல்லது வேறு எந்த காரணத்தினாலாவது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு சந்தேகங்களுக்கு அடுத்தடுத்து எழுந்து வருகின்றன.