நாட்டுக்காக துணை நிற்போம்! பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்திய படத்தில் நடிக்க அதிரடி தடை! மீறினால் கடும் நடவடிக்கை! 

புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக, தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள், இந்திய படங்களில் நடிக்க, அனைத்து இந்திய தொழிலாளர்கள் சங்கம் தடை வதித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், இந்திய ராணுவ வீரர்கள் மீது, கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில்,  இதுவரை 49  பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். நேற்றைய தினம், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக, அரசு எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு துணை நிற்போம் என அறிவித்தனர் நடிகர் சங்க நிர்வாகிகள். 

இந்நிலையில், பாலிவுட்டில் திரையுலகில் அதிக பாகிஸ்தான் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இனி, பாகிஸ்தான் கலைஞர்களுக்கு பாலிவுட்டி மற்றும் அணைத்து இந்திய மொழி படங்களிலும் நடிக்க தடை விதித்து மேற்கு இந்திய திரைப்படத் தொழிலாகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ...  ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கண்டனமும், வீரமரணம் அடைந்த தியாக வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து கொள்கிறது. 

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள், மற்றும் மற்ற கலைஞர்கள் இந்திய படங்களில் நடிக்க, பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி அவர்களை யாராவது படங்களில் பயன்படுத்தினால் அவர்களுக்கும் தடை விதிக்கப்படும். மேலும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நாடு தான் முதலில், நாட்டுக்காக துணை நிற்போம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.