பாலிவுட் திரையுலகில், நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில், வெளியான 'குயின்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.

தமிழில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முழுவதும் முடிவடைந்து, தற்போது சென்சார் அதிகாரிகளின் சான்றிதழை பெற, அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த படத்திற்கு 25 கட் போட்டியிருந்தனர். அதிகாரிகள் இப்படி செய்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக இந்த படத்தின் டீசர் வெளியான போது, காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவருடைய தோழி தொடுவது போல் இடம்பெற்றிருந்த காட்சி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்சார் அதிகாரிகளின் முடிவு ஏற்கக்கூடியதாக இல்லை என படக்குழுவினர் காஜல் அகர்வாலை ஏமாற்றிய ரிவைஸ் கமிட்டிக்கு சென்றனர். அவர்கள் கொடுத்துள்ள பதிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. அதாவது,  சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து வேறு வழி இல்லை என கை விரித்து விட்டனர்.  இதனால் குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க படக்குழுவினர் கனத்த மனதுடன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

'குயின்' படத்தில் இந்த காட்சி இடம்பெறும் நிலையில் தமிழில் மட்டும் இந்த காட்சியை நீக்க உள்ளனர். தமிழை தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த காட்சி இடம்பெறும் என தெரிகிறது. தமிழில் இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.