அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும்  விழாவில் இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த  நடிகை ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில்  நடைபெற்று வருகிறது. . 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபாய் சென்றபோது குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மறைவு இந்திய ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. இதே போல் கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தி நடிகர் சசிகபூர் மரணமடைந்தார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விவில்  இந்தியாவைச் சேர்ந்த நடிகர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது இந்திய திரையுலக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானா இந்தி நடிகர் சசி கபூர் ஆகியோருக்கும் ஆஸ்கார் விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. இது குறித்து இந்தியத் திரை உலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.