Padmavathi movie beat Bagubali

பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கும்படி செய்தவர் இயக்குனர் ராஜமௌலி. தற்போது பாகுபலி திரைப்படத்தைப் போலவே வரலாற்றுச் சிறப்பு மிக்க திரைப்படத்தை இயக்கி பாகுபலியை விட அதிகமான திரையரங்குகளில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

பாகுபலி திரைப்படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 7500 திரையரங்குகளில் வெளியானது. மேலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. தற்போது இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மைசூர் மகாராஜா மற்றும் ராணி பத்மாவதி பற்றிய வழக்கின் அடிப்படையில் அமைந்த வரலாறு படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இதன் மூலம் பாகுபலி சாதனையை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வரலாற்று கதை, இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.