தமிழ்த் திரையுலகில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் பிரபுதேவாவுக்கு மத்திய அரசு கன்னாதர் என்கிற பிரிவில் பத்ம விருது வழங்கியுள்ளது. இது ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் பிரபுதேவாவின் பூர்வீகம், மைசூர் என்பதால், அவரை கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று, பிரிந்து மத்திய அரசு விருது இந்த விருதினை அறிவித்துள்ளது. 

நேற்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பிரபுதேவாவின் பெயர் கர்நாடகா பிரிவில் இருந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பிரபுதேவாவுக்கு ஏன் கர்நாடகப் பிரிவில் விருது என பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கேள்வியை எழுப்பி வந்தனர்.

பிரபுதேவா கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் என்றாலும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே, இவருடைய பெற்றோர்  சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டனர். இதனால் இவரை பெரும்பாலானோர் தமிழர் என்றே கருதி வருகின்றனர்.

மேலும் பிரபுதேவா, இதுவரை ஒரு கன்னட படத்தில் கூட, பணியாற்றியது இல்லை. தமிழில் மட்டுமே அதிகப்படியான படங்களில் ஹீரோவாகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இதனால் இவருக்கு தமிழகத்தில் தான் ரசிகர்கள் ஏராளம்.

அதே போல் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல  படங்களை இயக்குள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.  அவர் இயக்கிய பாலிவுட் படங்கள்  தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், பிரபுதேவாவிற்கு பல பாலிவுட் ரசிகர்களும் உள்ளனர்.

ஆனால், இவருக்கு... கன்னடர் என்கிற பிரிவில்  பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது மட்டும் இன்றி பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.