Asianet News TamilAsianet News Tamil

இயக்குனராக அவதாரம் எடுத்த பா.ரஞ்சித் பட இளம் நடிகர்! குவியும் வாழ்த்து..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அறிமுகமான நடிகர் 'அட்டகத்தி' தினேஷ், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்க உள்ள திரைப்படம் குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில், புதிய போஸ்டர் உடன் வெளியிட ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

pa ranjith movie actor turn to direction
Author
Chennai, First Published Mar 30, 2021, 12:46 PM IST

 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அறிமுகமான நடிகர் 'அட்டகத்தி' தினேஷ், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்க உள்ள திரைப்படம் குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில், புதிய போஸ்டர் உடன் வெளியிட ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

pa ranjith movie actor turn to direction

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குனராகவும் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட பல பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் எம்,ஜி.ஆர், சிம்பு, தனுஷ், அர்ஜுன் உள்ளிட்ட பலரை சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தினேஷும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தாலும், பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் தினேஷ்.

pa ranjith movie actor turn to direction

அந்தவகையில் இவர் நடித்த எதிர்நீச்சல், குக்கு, விசாரணை, கபாலி, உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு சிறந்த நடிகர் என்கிற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. மேலும் தற்போது 'வாராயோ வெண்ணிலாவே' மற்றும்' பல்லு படாம பார்த்துக்கோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 'வயிறுடா' என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

pa ranjith movie actor turn to direction

இந்த படம் குறித்த அடுத்த கட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், யானை சாணம் போடுவது போன்றும், மலைகளில் செடிகள் முளைத்து இருப்பது போன்றும் உள்ளது. மேலும் யானையின் காலும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, இது சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கும் என்றும், யானை குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறும் விதத்தில் இந்த படத்தை அவர் இயக்க உள்ளது தெரிகிறது. இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள இளம் நடிகருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios