இயக்குநா் பா.ரஞ்சித் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாற்போது இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படும், இயக்குநா் பா.ரஞ்சித் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாற்போது இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் பா.ரஞ்சித் 2019 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சோழ மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்... ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று கூறி இருந்தார்.

இவருடைய இந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ரஞ்சித்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் குவிந்தது. மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசிய இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் அள்ளிக்கட்டது. இந்த புகார் குறித்து பா.ரஞ்சித் தரப்பில் இருந்து முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு ஏற்கனவே நடந்த போது, முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரி செய்து புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை முடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ராஜராஜ சோழன் குறித்த பேச்சில் இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.