oviya new treanding hair style

பிக்பாஸ், நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்ட ஆரவ் மீது இவருக்கு காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவரது காதலை ஏற்றுக்கொண்ட ஆரவ், பின் ஒரு சில காரணங்களால் இவரை ஒதுக்க துவங்கினார்.

இதனால் ஒரு நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டர் என்பது நாம் அறிந்தது தான்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஓவியா பல, விளம்பர படங்கள், மட்டும் திரைப்படங்கள் நடிப்பதில் பிஸியாக மாறினார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து ஷாக் கொடுத்தார். 

இந்நிலையில் தமிழ் மொழி மட்டும் இன்றி, மலையாளப் படங்களிலும் பிஸியா நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனை உறுதி செய்யும் விதத்தில் கடந்த வாரம் ஓவியா, ஆரவுடன் தாய்லாந்தில் டேடிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியது.

இதைதொடர்ந்து தற்போது புதிய ஹேர் ஸ்டைலில், சிம்பு மற்றும் ஆரவுடன் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஆரவ் மற்றும் ஓவியா காதலிப்பதாக கிசுகிசுக்க படுகிறது.