oviya love torches for aarv

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள, ஓவியா மற்றும் ஆரவ் காதலித்து வருகிறார்கள் என்பது அவர்கள் நடந்துக்கொள்ளும் விதத்திலேயே தெரிகிறது.

பல விதமாக ஓவியா ஆரவ் மீதுள்ள காதலை வெளிப்படுத்திய போதிலும் இது வரி ஒரு முறை கூட ஆரவ் தன்னுடைய காதலை ஓவியாவிடம் கேமராக்கள் உள்ளதால் வெளிப்படுத்தியது இல்லை.

இந்நிலையில் தற்போது அனைவரையும் பைத்தியங்களாக நடிக்கக்கூறி ஒரு டாஸ்க் வைத்துள்ளனர். இதில் ஓவியா காதல் தோல்வி அடைந்து தன்னுடைய காதலனை தேடுவது போன்ற கதாபாத்திரம் கொண்டவர்.

தன்னுடைய காதலன் யார் என தேடிக்கொண்டிருந்த ஓவியா... ஆரவை பார்த்து நீ தான் என் காதலனா, அப்போ உம்மா கொடு என ஆரவை சுற்றி சுற்றி வந்தார். மேலும் மசாஜ் செய்வதாக கூறி ஆரவை அமுக்கினார். இவர் இப்படி செய்ததை கண்டு கடுப்பான ஆரவ், ஏன் இவள் இப்படியெல்லாம் செய்து தன்னை அசிங்கப்படுத்துகிறாள், கேமராக்கள் உள்ளது தன்னை பார்ப்பவர்கள் என்ன நினைத்து கொள்வார்கள்.. உம்மா கொடு உம்மா கொடு என தன்னையே சுற்றி வருகிறாள் என சினேகனிடம் புலம்பினார்.