oviya latest love tweet

நடிகை ஓவியாவிற்கு கோலிவுட் திரையுலகில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதுக்கு காரணம் அவர் மனசு தான். இவருடைய நல்ல மனதை புரிந்துக்கொண்ட ரசிகர்கள் பலர் தொடர்ந்து ஓவியாவுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மரியாதை கொடுக்கும் ஓவியா:

ஓவியா ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு மரியாதை தரும் விதத்தில், பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வபோது தன்னுடைய ரசிகர்களில் வீட்டுக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ஓவியா ட்விட்:

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முக்கிய காரணம் அவர் காதல் தான். ஆனால் இவரை காதலிப்பது போல் நடந்துக் கொண்டு கடைசியில் எதுவுமே நடக்காததுப் போல் நடந்துக்கொண்டார் ஆரவ்.

ஓவியா வெளியேறிய சில நாட்களில்.... "நான் சிங்கள் என ட்விட் போட்டார்" இவர் போட்ட இந்த ட்விட்டுக்கு பல லைக்குகள் போட்டுக் குவித்தனர் ரசிகர்கள். மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ட்விட்டரில் தன்னுடைய ரசிகர்கள் கேட்டகேள்விக்கு நேரடியாகவே பதிலளித்தார்.

தற்போதைய ட்விட்:

இந்நிலையில் தற்போது ஓவியா போட்ட ஒரு 'லவ் ட்வீட்டுக்கு' ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்

இதில் ஓவியா... நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை, அவர்கள் நேசிப்பதால் தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

My fans don't love me bcoz I'm successful!! I'm successful bcoz my fans love me🤗🤗

— Oviyaa (@OviyaaSweetz) February 3, 2018