oviya is lucky twit for vivek

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவரை சாதாரணமாக தான் பல ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் சில நாட்களுக்கு பின் இவர் நடந்து கொண்ட விதம், இவருடைய துணிச்சலான பேச்சு , நல்ல மனம் பலரையும் கவர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.


இந்நிலையில் தற்போது, இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்த தகவலை சமீபத்தில் இவர் கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்தார்.


இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதை, தொலைக்காட்சி மூலம் பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக், இந்த பேட்டியில் ஓவியா மிகவும் உண்மையாகவும், தாழ்மையாகவும் பேசியுள்ளார். இவரின் இந்த உண்மையான குணம் தான் இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்துள்ளது என்றும் ஓவியா ஆசிர்வதிக்கப்பட்டவர் மற்றும் மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறி ட்விட் செய்துள்ளார்.

Scroll to load tweet…