பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது ஆதரவையும் பெற்று பிரபலமாகி வருபவர் நடிகை ஓவியா. இவருக்கு இத்தனை ரசிகர்கள் உருவாகக்காரணம் இவர் யாரையும் பற்றி பொய் சொல்லுவது, கோள் மூட்டுவது, குறை கூறுவது என இல்லாமல் உண்மையாக இருப்பது தான்.

ஏற்கனவே இவர் யாரையும் மதிப்பதில்லை என ஒதுக்கி வைக்கப்பட்டாலும் சிலருடன் பேசிவந்தார். தற்போது அதுவும் இல்லாமல் தனியாக அனைத்து பெண் போட்டியாளர்களாலும் ஒதுக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தனக்கு அழுவது பிடிக்காது என சிறு விஷயங்களுக்கும் சண்டைகளுக்கும் அழாமல் இருந்த ஓவியா தற்போது முதல் முறையாக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தன்னை ஒதுக்குகின்றனர் பின் ஏன் நான் இங்கு இருக்க வேண்டும் என கூறி அழுவது போன்ற ஒரு காட்சி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.