பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்த சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள போதிலும் தற்போது வரை சமூக வலைதளத்தை கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்கள் சதீஷ் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இவர்கள் நடிகை ஓவியாவை மேடைக்கு அழைத்தபோது மேடைக்கு வந்த ஓவியா ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் அள்ளித்தெரித்தார். இதை பார்த்த சதீஷ் ரசிகர்களுக்கு தரீங்க எங்களுக்கு கொடுக்க மாடீங்களா என கேட்க, சிரித்தபடியே சதீஷின் கன்னத்திலும், ரோபோ சங்கரின் கன்னத்திலும் நச்சு முத்தம் கொடுத்தார்.

இதைப் பார்த்து, விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களான நயன்தாரா, உள்ளிட்ட பலர் அரங்கமே அதிரும் அளவிற்கு கைத்தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.