ஓவியாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை கண்டு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்னணி கதாநாயகர்கள் படத்தில் இவரை புக் செய்ய போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஓவியா தனக்கு எப்படி பட்ட கணவர் அமையவேண்டும் என எதிர்பாத்தேன் என்பதை கண்கள் கலங்கியவாறு ஆரவிடம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்... நான் நினைத்தது ஒரு ஆண் துணிச்சலாக இருக்கணும் உண்மையை பேசணும்,யாரையும் விட்டுக்கொடுக்க கூடாது   என்றும் கூறினார். மேலும் முதலில் உன்னுடைய விஷயத்தில் நீ யாரையும் புண் படுத்த மாட்ட நடுநிலையாக  இருப்ப என்றும் நினைத்தேன். ஒரு கட்டத்துல நான் தனிமையை உணர்தேன், என்கூட ஒருத்தர் இருக்கணும் என்று தோணுச்சு. ஒரு நிலையில யாரும் வேண்டாம் என்று கூட தோணிடுச்சு.

ஆனா நேற்று உனக்கு நிறைய துணிச்சல் இருக்கிறது என்று உணர்தேன். நீ யாரையும் புண்படுத்த வேண்டாம் என்பதற்காக எல்லவரையும் கட்டுபடுத்தி வச்சிருக்குறத புரிஞ்சிக்கிட்டேன் என்று பேசியதும், ஆரவ் பேசும் போது உனக்கு ஒன்று தெரியுமா..? கடைசியில்  நான் என் வாழ்க்கையில் ஒரு ஆணை கண்டுபிடிச்சிட்டேன். அதற்கு ஆரவ் எதுவும் இப்போதைக்கு சொல்லாதே என ஓவியா வாயை அடைத்து விட்டார்.

இதில் இருந்து சில நாட்களாக ஆரவ் ஓவியாவை சும்மா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது உண்மையாகிவிட்டதாக தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாப்போம்