கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினாலும், இவர்களில் அனைத்து ரசிகர்களின் இதயத்தையும் வென்றவர் நடிகை ஓவியா தான். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப் போது  ஆரவ்வை காதலிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் பழகிய ஆரவ் தீடீர் என ஓவியாவை காதலிக்க வில்லை என கூறி கழட்டி விட்டார்.

காதல் தோல்வி அடைந்ததனால் துக்கம் தாங்க முடியாமல் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  ஆனால் மக்களின் மனதினுள் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.  

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சில நாட்கள் கழித்து ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் சிங்கிள் என ட்விட்  போட்டார், பிக்பாஸுக்கு பிறகு அவ்வப்போது ஆரவ்வை சந்தித்து வந்தார், ஓவியா. மேலும், இந்த ஜோடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியது. 

மேலும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் தனக்கும் ஆரவ்க்கும்  உள்ள உறவு குறித்து பேசினார். அப்போது, "நாங்கள் இருவரும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக அவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை. 

மேலும், சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை" எனக் கூறினார்.