பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அனைத்து போட்டியாளர்களை விட மிகவும் வித்தியாசமானவர் நடிகை ஓவியா. இதனால் தான் இவரை பலருக்கு பிடிக்கும், இவர் மீது யார் கோபம் கொண்டாலும் அதனை பற்றி சிறிதும் யோசிக்காமல் நன்றாக சாப்பிடும் குணம் கொண்டவர்.

ஆரவ்வை தீவிரமாக காதலித்து வந்த ஓவியாவை சில நாட்கள் காதலிப்பதாக கூறி வந்த ஆரவ் தற்போது இருவரும் நண்பர்கள் தான் என கூறினார். 

இதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஓவியா தான் பிக் பாஸ்ஸிடம் பேசும் வரை நான் சாப்பிடப்போவதில்லை என கூறிவருகிறார்.

பிந்து மாதவி சாப்பிடுமாறு கூறும் போது தனக்கு பசிக்கவில்லை என கூறுகிறார், ரைசா எதோ ஸ்வீட் கையில் வைத்துக்கொண்டு சாப்பிடும் படி கூறும் போது நீங்க தான் ரொம்ப ஸ்வீட் இதையும் நீங்களே சாப்பிடுங்கள் என கூற, காயத்ரியும் சாப்பிடுங்கள் சாப்பாடு ஆறிப்போய்விடும் என கூற அவரை மூஞ்சில் அடித்த போல் எனக்கு அம்மா இருக்காங்க நீங்க அக்கறை காட்ட தேவை இல்லை என்று பேசுகிறார்.

ஓவியா சாப்பிடாமல் செய்து வரும் சேட்டைகளை பார்த்து, இந்த வாரம் ஓவியாவை வெளியேற்ற வில்லை என்றால், சமைக்க மாட்டோம், பாத்திரம் சுத்தம் செய்ய மாட்டோம், என கூறப்போவதாக கூறுகிறார். மேலும் ஓவியா ஒருவரால் 8  நபர்கள் பதிக்கப்படுவதாக கூறி ஆத்திரப்படுகிறார்.

ஆனால் ஓவியா கேமராவிடம் சென்று பிக் பாஸ் நீங்கள் என்னை அழைத்து பேசும் வரை நான் கண்டிப்பாக சாப்பிட முடியாது என திட்ட வட்டமாக கூறுகிறார்.