oviya dance and dhoti is Unveiled
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நடிகர் கமலஹாசனின் ஒரு பாடலை தேர்வு செய்து, "விருமாண்டி" படத்தில் வரும் கமலஹாசனை போல் வேஷமிட்டு வேஷ்டி, கருப்பு சட்டை அனைத்து டான்ஸ் ஆட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
முதலாவதாக நடிகை ஆர்த்தி, சுழலும் ஒரு மேடையின் மேல் நடனமாடினார். பின்பு காயத்திரி ரகுராம் பஞ்ச தந்திரம் படத்தில் இடம்பெறும் "வந்தேன் வந்தேன்" என்கிற பாடலுக்கு நடனமாடினார். இதனை தொடர்ந்து நடிகை ஓவியாவிற்கான பாடல் ஒளிபரப்பப்பட்டது.
இதில் நடிகை ஓவியா மிகவும் ஆர்வத்துடன் "பஜன் பஜங்கா" பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி அவிழ்ந்து விழத் தொடங்கியது.
இதனை பார்த்து பலரும் பதறி விட்டனர். ஆனால் ஓவியா சிறிது நேரம் சென்று தான் வேஷ்டி விழ போவதையே பார்த்தார். பின் ஐயோ பாத்துட்டிங்களா என்று சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவி சென்றார்.
