பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், சினேகன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் ஓவியா சினேகனிடம் திடீர் என உம்மா கொடுப்பது தவறா என்று ஒரு கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு பதில் அளித்த சினேகன் இல்லை, முத்தம் உலகில் உள்ள அனைத்தையும் விட மிகவும் புனிதமான ஸ்பரிசம் என கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார். 

மேலும் காதல் என்பதில் கட்டிப்பிடிப்பது ,முத்தம் கொடுப்பது ,என்று எல்லாமே இருக்கும்.ஆனால் நாம் எல்லாரிடமும் கை கொடுக்கலாம், சிலருடன் கட்டி அணைக்கலாம், ஒருவருடன் கட்டிப்புரளலாம் ஆனால் முத்தம் என்பதை மட்டும் 5 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா, அக்கா, அம்மா, அப்பா  என அனைவருக்கும் கொடுக்கலாம். அதனால் முத்தம் தான் உலகத்தில் மிகவும் புனிதமான ஸ்பரிசம் என மிகவும் கவித்துவமாக பேசுகிறார்.

இதனை கேட்டு கொண்டிருந்த ஓவியா நான் வேண்டும் என்றால் ஜூலிக்கு போய் முத்தம் கொடுக்கவா என கேட்க... அதற்கு ஆரவ் அவளுக்கும் கொடுப்பதற்கு கொடுக்காம இருக்குறது தான் நல்லது என்று ஓவியாவிடம் கூறி இந்த முத்த பேச்சுக்கு முழுக்கு போட்டார்.