oviya and arav again love
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே ஓவியா ஆரவை காதலில்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். முதலில் இவர்களுடைய காதல் ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் ஒரு சில நாட்களில் இந்த ஜோடிகள் உண்மையில் இணைந்தால் நன்றாக இருக்கும் என பலர் தங்களுடைய விருப்பங்களை இணையதளத்தில் தெரிவித்தனர்.
ஆனால் ஆரவ் சில நாட்களில் டபுள் கேம் ஆடுவதை அறிந்த ஓவியா மிகவும் கூல்லாக நான் உன்னை காதலித்ததாக சொன்னதை மறந்து விடு இனி நானும் நீயும் நண்பர்கள். எனக்கு இப்போ காதலிக்க பிடிக்கவில்லை என கூறினார்.
இப்படி தீடீர் என பிரிந்த காதல் ஜோடிகள் தற்போது மீண்டும் இணைய தொடங்கியுள்ளனர். பிக் பாஸ் குடும்பத்தில் தற்போது அரங்கேறி வரும் நாடகத்தில் ஜூலியின் தோழியாக வந்திருக்கும் ஓவியா மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். அதிலும் எப்போதும் எதையாவது செய்து மாட்டிக்கொள்ளும் இவருடைய குறும்பு தனத்தையும் பல ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது ஓவியா தன்னையே மறந்து ஆரவ் மீது படுத்துக்கொண்டு இருப்பது... சீண்டி சண்டை வாங்குவது... திருட்டு தனமாக கையைபிடித்துக்கொள்வது என பல சேட்டைகள் செய்வதால் திரும்பவும் இவர்கள் காதலை புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
