oviya acting lesbiyan character

புத்தாண்டு ஆல்பம் சாங்

கடந்த புத்தாண்டிற்கு மரண மட்டை என்ற ஆல்பம் சாங்கை வெளியிட்டார் சிம்பு.இதில் சிறப்பு என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்த ஓவியா இதில் பாடியிருப்பார்.இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆனது.இந்த நிலையில் முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர்.

இசையமைப்பாளர்

ராகவா லாரான்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்து வரும் ஓவியா 90ml படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குளிர்100 படத்தை இயக்கிய அனு உதீப் இயக்கவுள்ளார்.இந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கவுள்ளார்.சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சிம்பு. இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து சிம்புவுக்கு இசையமைக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

பஸ்ட் லுக் போஸ்டர்

அந்த வகையில் சிம்புவுக்கும் ஓவியாவுக்கும் காதல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சில நாட்களுக்கு முன் வதந்திகள் பரவி வந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஓவியா ஓரினச்சேர்க்கையாளரா

நிவிஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர்.இந்த படத்தில் ஓவியா ஒரின சேர்க்கையாளராக நடிக்க உள்ளார் என்ற செய்தி பரவினால் படக்குழுவினர் இது பற்றி உறுதிபடுத்தவில்லை.

Scroll to load tweet…