Our child is back says Prakash raj
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகைகள் டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் அருண் மொழிவர்மனின் மகள் அப்ரினா காணாமல் போனார். இதுகுறித்து காவல் துறையினர் ஐந்து நாட்கள் தீவிரமாக விசாரித்து வந்த போதும், எந்த ஒரு ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தங்களுடைய அண்ணன் மகள் அப்ரினாவைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அழுது கதறினர்.
இந்நிலையில் தற்போது அப்ரினா இன்று பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளதாக நடிகரும், லலிதாகுமாரியின் முன்னாள் கணவருமான பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் டிவிட்டர் பதிவு:
#abrina. .. thank you to everyone who tried to help.. wish .. n prayed. Our child is back
— Prakash Raj (@prakashraaj) September 16, 2017
