ஆஸ்கர் விருது:

நேற்றைய தினம் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது வழங்கும் விழா. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஃபிரான்ஸ் எம்சி டோர்மட் என்பவருக்கு வழங்கப்பட்டது. 

இந்த விழா மேடையில் பேசிய நடிகை ஆஸ்கர் விருது தன்னுடைய வாழ்நாள் கனவு என்று கூறி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

எதிர்பாராமல் நடந்த சம்பவம்:

இந்நிலையில் விருது வழங்கும் விழா முடிந்ததும் நடந்த பார்ட்டில் நடிகை எம்சி டோர்மட் கலந்துக்கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துக்கொண்டார். 

பார்ட்டி நடந்துக்கொண்டிருந்த போது திடீர் என இவருடைய விருது காணாமல் போனது. அதிர்ச்சி அடைந்த இவர் தன்னுடைய விருது தொலைந்ததால்  நிலைக்குலைந்து போனார்.

காவல்துறையில் புகார்:

விழா குழுவினர் உடனடியாக இவருடைய விருது காணாமல் போனதை தொடந்து போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார். 

ஒருவர் போதையில் இது தன்னுடைய விருது என புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்து சந்தேகப்பட்டு விசாரணை செய்தபோது அவர் நடிகையிடம் இருந்து விருதை திருடியதை ஒப்புக்கொண்டார்.

உடனடியாக விருதை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்டவர் பெயர் டெர்ரி பிரையண்ட் என்றும் இவர் சமையல் குறிப்புகள் எழுதும் பிரபல எழுத்தாளர் என்றும் தெரியவந்துள்ளது.