oscar award function celebrate child artist sunny

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த 89வது ஆஸ்கர் விருது விழா இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5 மணியளவில் தொடங்கியது. இந்த விழாவில் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் லயன் படத்தில் நடித்த சன்னி பவார் என்கிற சிறுவனும் கலந்து கொண்டான்.

சன்னி பவாரை பலரும் பாராட்டி டுவிட் செய்துள்ளனர், அது மட்டுமின்றி விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கெம்மல் சன்னியை தலையில் தூக்கி வைத்து நடனமே ஆகிவிட்டார், இதனை சற்றும் எதிர்பாராத பிரபலங்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததில் அந்த அரங்கமே அதிர்ந்தது.

இதை தொடர்ந்து சாக்லேட் அடங்கிய பைகள் அரங்கில் கொட்ட, சன்னி சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான். இதன் மூலம் மேலும் பல ரசிகர்கள் சன்னிக்கு கிடைத்துள்ளனர்.