oscar award 2017

உலக திரைப்பட விருது வழங்கும் விழாவில் முக்கியமானதும், ஆஸ்கார் விருது வழங்கும் விழா சிறிது நேரத்திற்கு முன்னர் தொடங்கி விருது பெற்றவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விருது 24 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. ஆஸ்கார் விருதுக்கு ’லா லா லேண்ட்’ திரைப்படம் 14 பிரிவுகளிலும், மூன்லைட், அரைவல் ஆகிய படங்கள் 8 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் 89-வது ஆஸ்கர் திருவிழாவில் வெற்றி பெற்ற கலைஞர்களின் பட்டியல் இதோ:

* சிறந்த தழுவல் திரைக்கதை - மூன்லைட் | திரைக்கதை: பாரி ஜென்கிங்ஸ், கதை - டாரெல் ஆல்வின் மெக்கிரானி

* சிறந்த திரைக்கதை: மான்செஸ்டர் பை தி ஸீ - கென்னத் லோனர்கன்

* சிறந்த பாடல்: சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் - லா லா லேண்ட்

* சிறந்த பின்னணி இசை: லா லா லாண்ட் - ஜஸ்டின் ஹர்விட்ஸ்

* சிறந்த ஒளிப்பதிவு - லா லா லேண்ட்

* சிறந்த எடிட்டிங்- ஜான் கில்பர்ட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன் பிரிவு)- சிங்

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- தி ஜங்கிள் புக்

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு- டேவிட் வாஸ்கோ (படம்: லா லா லேண்ட்)


* சிறந்த குறும்படம் (அனிமேஷன் பிரிவு)- பைபர்

* சிறந்த ஒலிக்கலவை- கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் (படம்: ஹாக்‌ஷா ரிட்ஜ்)

* சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- அலெஸாண்ட்ரோ பெட்ரோலாஸி மற்றும் கியோர்கியோ (படம்: சூசைட் ஸ்குவாட்)

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம்- தி சேல்ஸ்மேன் (ஈரான்)

* சிறந்த ஆவணப்படம்- ஓ.ஜெ.மேட் இன் அமெரிக்கா

* சிறந்த அனிமேஷன் திரைப்படம்- ஜூடோபியா

* சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)

* சிறந்த உறுதுணை நடிகை- வயோலா டேவிஸ் (படம்: பென்சஸ்)

* சிறந்த உறுதுணை நடிகர்- மஹெர்சலா அலி (படம்: மூன்லைட்)