பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலிக்கும் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர். 

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலிக்கும் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரது கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றது. இந்த திரைப்படம் தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் 25 முதல் 27 வரை நடைபெறக்கூடிய இந்த ஆடிஷனில் கலந்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நம்பர் - 4,தென்றல் நகர், மகாராஜா நகர் போஸ்ட், திருநெல்வேலி (அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை எதிரில்) என்கிற முகவரிக்கு சென்று பங்கேற்று கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9176269475 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என படக்குழு அறிவித்துள்ளது.