தமிழ் திரைப்பட உலகில், 2018ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 70க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்த நிலையில், எந்தெந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து, கலெக்சனை அள்ளின என்பதை பார்ப்போம்… அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களில் கிடைத்த முகவரியை வைத்து, போயஸ் கார்டனை அடைந்த பா.ரஞ்சித், ரஜினியை வைத்து இயக்கிய கபாலி படம் பெரும் வெற்றிபெற்றது.இதையடுத்து, மீண்டும் இணைந்த ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான கபாலி படம், பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தனுஷ் தயாரிக்க ரஜினியுடன் ஈஸ்வரி ராவ்,நானா படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி எனப் பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியுள்ளது.அதேபோல், நடிகை நயன்தாராவின் காதலராக வலம்வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளியானது. அனிருத் இசையமைத்த பாடல்கள் பெரும் வெற்றிபெற்ற நிலையில், கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி என்ற நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான படமும் வெற்றிபெற்று, கலெக்சனை குவித்தது. சுந்தர் சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த கலகலப்பு-2 படத்தில் ஜீவா, சிவா, விமல் ஆகியோர் நடித்து இருந்தனர். சிரிப்பு மத்தாப்பு கொளுத்திய இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூலை அள்ளியுள்ளது.பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம் நாச்சியார். இதில், ஜோதிகா பேசிய வசனங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும், பலரின் பாராட்டுகளை பெற்றது. அதனால், படமும் வசூலை பெற்று, இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா அமைதியான தோற்றத்தில் நடித்த மெர்க்குரி திரைப்படமும், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இரட்டை அர்த்த வசனங்களுடன் வெளியாகி, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களும் வசூலை அள்ளியுள்ளன. இணையதளத்தில் தனிநபர் டேட்டா எவ்வாறெல்லாம் திருடப்படுகிறது என வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்து வெளியான இரும்புத்திரை ஆகிய படங்களும் வசூலை குவித்துள்ளது.