ஒருதடவை உல்லாசத்துல கர்ப்பமாக முடியுமா..? என திரெளபதி இயக்குநரிடம் கேள்வி கேட்டு அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். 

17 வயது சிறுமி ஒருவரை வாலிபர் ஒருவர் நாடகக் காதல் மூலம் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு மீண்டும் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டது குறித்த செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது.  இதனை மேற்கோள்காட்டி திரெளபதி இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ’’நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே  இயக்குனர் நவீன் பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.

இவரது பதிவுக்கு எதிராக கனகாம்பரி என்பவர், ‘’5 வயசு குழந்தைக்கே யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது. யார் எது கொடுத்தாலும் வாங்ககூடாது என தெரியும். 17 வயது என்பது மெச்சூரிட்டி வயதுதான். பெற்றவர்கள் வளர்ப்பு சரியில்லை. அந்தப்பிள்ளை எதுக்கு தனிமைக்கு போக வேண்டும்..? பப்ளிக்கா லவ் பண்ணமுடியாதா? அதுவுமில்லாமல் ஒரு நாள் தப்பில் கர்ப்பமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடகக் காதலை எதிர்த்து தான் மோகன் ஜி திரெளபதி படம் இயக்கியுள்ளார். திட்டமிட்டு நடத்தப்படும் நாடகக் காதலை மட்டுமே பலரும் எதிர்த்து வருகின்றனர். ஒரு 17 வயது பெண்ணை கர்ப்பாக்கி காமுகன் ஒருவன் காதல் என்ற போர்வையில் சீரழித்து இருக்கிறான். அதற்காக அனுதாபப் படாமல், பாதிக்கப்பட்ட பெண் மீது தவறை தூக்கிப்போடலாமா? அந்தக் காமுகனின் செயலை ஆதரிக்கும் வகையில் ட்விட் போட்டுள்ள இவரும் ஒரு பெண் தானே. மகளின் வாழ்க்கையும், மானமும் போன கவலையில் ஆழ்ந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தையரை குற்றம்சாட்டி நியாயம் சேர்க்கிறாரா இந்தக் கனகாம்பரி?

சாதியை தாண்டி, தானும் ஒரு பெண் என்றும் பாராமல் ஒருநாள் தப்பில் கர்ப்பமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள இந்தப்பெண்ணின் மனநிலையை எப்படி எடுத்துக் கொள்வது? ‘’என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.