உலக ரோஜா திறத்தில் (World Rose Day ) நடிகர் சிம்பு (Silambarasan ) கலந்து கொண்டு டான்ஸ் ஆடி மகிழ்வித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நாளாக இத்தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்படுகிறது. இதனால் புற்று நோய் சிகிச்சை பெரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, எவ்வித பயமும் இன்றி விரைவில் அவர்கள் குணமடையவும், அவர்களது வாழ்நாள் நீடிக்கும் என நம்ப படுகிறது.

இதில் ஒவ்வொரு ஆண்டும், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் நேற்று நடந்த உலக ரோஜா தினத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நடிகர் சிம்பு கலந்துகொண்டார். இதில் அவர் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் சிம்பு டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்திய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…