*விஜய் சேதுபதியிடம் ஒரு விழாவில் ‘எந்த நடிகையை கடத்த ஆசை?’ என்று கேட்டபோது கொஞ்சம் கூட தயங்காமல் ‘நயன்  தாரா’ என்றார். அதன் பின் இருவரும் செம்ம ஹாட் ஜோடியாகினர். இப்போது இதே டயலாக்கை ராஷ்மிகாவை பார்த்து ஹரீஷ் கல்யாண் சொல்லியிருக்கிறார். (நல்லா வருவ தம்பி)

* பாலிவுட்டில் ஒரு காலத்தில் கோலோச்சியவர் தபு. தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவிலும் ஒரு ரவுண்டு லேசாக வந்தார். 48 வயதாகிவிட்ட அவர் இப்போது சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். ‘ஏ சூட்டபுள் பாய்’ எனும் தொடரில், தன் வயதில் பாதியான 24 வயது இஷான் கட்டாருடன் தபு ரொமான்ஸ்கிறார். பெட் போடப்பட்ட ஊஞ்சலில் இவர்கள் இருவரும் இருக்கும் காட்சி வலைதளத்தில் வைரலாகிறது. (வயசானாலும் தபுவோட....)

* மீம்ஸ் உலகம் வடிவேலு இல்லாமல் இயங்காது! எனும் நிலை உருவாகிவிட்டது. எல்லா சந்தோஷங்கள், பிரச்னைகளுக்கும் அவரது ரியாக்‌ஷன்கள் ஒத்துப்போகும். இந்த சூழலில் வடிவேலுவின் டயலாக்கை, டைட்டிலாக வைத்து ஒரு படமே உருவாகிக் கொண்டிருக்கிறது. ‘எதையும் பிளான் பண்ணி பண்ணனும்’ எனும் ‘போக்கிரி’ பட வடிவேலு வசனம்தான் டைட்டிலே. பிளானே பண்ணாமல் திடீர் ட்ரிப் கிளம்பும் ஒரு டீமின் அனுபவங்கள்தான் படமாம். (கதையையாவது பிளான் பண்ணி எடுங்கப்பா)


* ஷங்கர் தன் படங்களை ஷூட் செய்ய அதிக நாட்கள் எடுப்பது வழக்கம். ஆனால் இந்தியன் -2 ஏகப்பட்ட பிரச்னைகளுக்குப் பின் துவங்கியது. ஆனால் என்னவோ ஷுட்டிங் முழுவது முடிந்துவிட்டது போல் ஒரு சுழல். கமல்ஹாசன், காலுக்கு ஆபரேஷன் செய்துவிட்டு நீண்ட விடுமுறையில் இருக்கிறார். காஜல் அகர்வாலோ ’என் நடிப்பை திரையில் காண ஆவலாய் இருக்கிறேன். வெயிட்டிங் ஃபார் ரிலீஸ்’ என்கிறார். (ஷூட் துவக்கம் போல் ரிலீஸ்லேயும் பஞ்சாயத்து பண்ணிடாதீங்கப்பா)


* காஜல் அகர்வாலுக்கு கமல்ஹாசனின் இந்தியன் - 2 படத்தில் வயதான லேடி வேடம். இதுபற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் அவர் “ இப்படத்தில் எனக்கு 85 வயது பாட்டி கேரக்டர் என்றதும், நம்மால் முடியுமா? என்று அச்சப்பட்டேன். ஆனால் நடிக்க துவங்கிய பின் தயக்கமெல்லாம் போய்விட்டது. கமலுக்கு அடுத்து கெத்தான கேரக்டர் எனக்கு.” என்று சொல்லியிருக்கிறார். இதையே ஏதோ இந்தியன் - 2 படத்தின் ஸ்கூப்பை காஜல் உடைத்துவிட்டது போல் க்ரூ திட்டி தீர்க்கிறது. 
(அப்ப ஷங்கர்?)


- விஷ்ணுப்ரிய