Venkat prabhu: தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, கோலிவுட்டில் வெங்கட் பிரபு முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். 

தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, கோலிவுட்டில் வெங்கட் பிரபு முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். 

வெங்கட் பிரபு ஆரம்ப கால பயணம்:

ஆரம்பத்தில், வெங்கட் பிரபு ஸ்ரீகாந்த் சினேகா நடித்த என்பரால் மாதத்தில், உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றினார். இதையடுத்து, சென்னை 28 என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு , படத்தை ஜாலியான மூடில் கொண்டு சென்று இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார். 

அஜித்தின் மங்காத்தா:

இதையடுத்து, இவர் இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட ஒரு சில படங்களை தவிர்த்து மற்ற அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக, இவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தது. இந்த திரைப்படம் இவருடைய கேரியரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

மன்மதலீலை

நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவை வைத்து மாநாடு' இயக்கிய வெங்கட் பிரபு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதையடுத்து, தற்போது இவர் இயக்கத்தில் வெளியான ‘மன்மதலீலை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 நாக சைதன்யா- வெங்கட்பிரபு கூட்டணி:

 முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து, தெலுங்கு - தமிழ் ஆகிய மொழிகளில் வெங்கட் பிரபு படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை புகைப்படம் வெளியிட்டு, வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Scroll to load tweet…

நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ் படமான, என்.சி 22' என பெயரிடப்பட்டு இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். விரைவில் படத்தின் நடிகை, நடிகர்கள் மற்ற கலைஞர்களின் விவரம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க ....Valimai: அஜித் பிறந்த நாளில் காத்திருக்கும் செம்ம ட்ரீட்...வலிமை நாயகனுக்காக பட குழு எடுத்த அதிரடி முடிவு..!