விஜய்யே கூப்பிட்டும் வரமுடியாது என அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா...செய்வதறியாது திகைத்து நிற்கும் விக்னேஷ் சிவன்...என்ற தலைப்பில் நமது இணையதளத்தில் கடந்த 13ம் தேதியன்று நாம் செய்தி வெளியிட்டபடியே நேற்றைய’பிகில்’பட ஆடியோ விழாவில் நயன் கலந்துகொள்ளவில்லை.

கடந்த வாரம் நாம் வெளியிட்டிருந்த செய்தியில்,...நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் ‘பிகில்’படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா’சர்கார்’படவிழா நடந்த அதே சாய்ராம் கல்லூரியில் வரும் 19ம் தேதி வியாழனன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’பாடலைப் பாடுவது உறுதியாகியுள்ளது. தனது வழக்கமாக குட்டிக்கதைகளை மட்டும் கொஞ்சம் எடுத்துவிடப்போகும் விஜய் அந்த மேடையில் இம்முறை அரசியல் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

இப்படி விழா ந்கழ்ச்சிகளை பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் மற்ற படங்களுக்காக எடுத்திருக்கும் கொள்கையை கொஞ்சம் தளர்த்தி விட்டு ‘பிகில்’பட ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்க ஒரு நொடி கூட யோசிக்காத நயன் ‘எனக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த  சிரஞ்சீவியின் பட விழாவுக்கே போகவில்லை. அதனால் வற்புறுத்தவேண்டாம் என மறுத்துவிட்டாராம். அடுத்து பேசிய இயக்குநர் அட்லிக்கும் நயன் அதே பதிலைக் கூற இறுதியாக தளபதியையே களத்தில் இறக்கிப்பார்க்க அதுவும் படுதோல்வியில் முடிந்ததாம்.  தன்னை ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம் நயன் பகைத்துக்கொள்வது கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் விக்னேஷ் சிவன் என்று பதிவிட்டிருந்தோம்.

ஆனால் அதையும் மீறி தயாரிப்பாளர் தரப்பில் பெரும் தொகை கொடுக்க முன் வந்திருப்பதால் கண்டிப்பாக நயன் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் தனது பாலிஸியில் உறுதியாக இருந்த நயன் ‘நோ மீன்ஸ் நோ’தான் என்று நிரூபித்தார்.