nude photo shoot take young actor
"சப்னா பபுல் கா பிதாய்” என்கிற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடித்து பிரபலமானவர் அங்கத் ஹசிஜா. இவர் தற்போது பல்வேறு தொடர்களில் நடித்து வருகிரார். பிதாய் தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் அவர் பட வாய்ப்புக்காக துணிச்சலான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.
அங்கத் நிர்வாணமாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தான் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்து தனது குடும்பத்தாரும், நண்பர்களும், சக கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் அங்கத்.
நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று நண்பர்களும், குடும்பத்தாரும் கேட்டனர். அதற்கு பாலிவுட் ஸ்டார்கள் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தும் போது, டிவி ஸ்டார்கள் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார் அங்கத்.

அங்கத் கடந்த மாதம் தான் பாத்டப்பில் சிகரெட்டை கையில் வைத்தபடி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் தனது இன்ஸ்டாகிராமில் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர் சின்னத்திரையையோ, சின்னத்திரை பிரபலங்களையோ சாதாரணமாக எடை போடாதீர்கள். தற்போது பெரிய திரையுலகில் பெரிய ஆட்களாக இருப்பவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். படங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள் என கூலாக தெரிவித்தார்.
