பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம், வீட்டிற்கு போனால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்ட ரம்யாவே மக்கள் மத்தியில் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

இவர் வெளியேறுவார், என கூறியதுமே மும்தாஜ் மிகவும் அதிர்ச்சியில் உறைந்தார். காரணம் இவரிடம் கமல், பிக்பாஸ் வீட்டை விட்டு, யார் வெளியேறினால் பெரிதாக வருத்தப்பட மாட்டீர்கள் என எழுப்பிய கேள்விக்கு, பொன்னம்பலம் அவர்கள் வெளியேறினால் வருத்தப்பட மாட்டேன் என தெரிவித்தார். 

இந்நிலையில் நான்காவது வாரமும் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட இவரை மக்கள் தங்களுடைய ஓட்டுகள் மூலம் நேற்றைய தினமும் காப்பாற்றினர். அதே போல் பாலாஜியும் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதாக கூறி "டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் வெளியே வாருங்கள்" என ரம்யாவிடம் கூறினார் கமல்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்... அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு பெயர் வைக்க வேண்டும் என கமல் ரம்யாவிடம் கூறி சில பொருட்களை கொடுக்கிறார். 

அப்போது இவர் யார் யாருக்கு என்ன பொருட்களை வைத்து, பெயர் வைத்துள்ளார் என்பதை பார்க்கலாம் வாங்க...

தூங்கு மூஞ்சி மகத்
டம்மாரம் - டானி
கூல் - வைஷ்ணவி
அங்க்ரி பேர்ட் - பாலாஜி 
டாக்டர் - பொன்னம்பலம் 
தலையாட்டி பொம்மை - ஐஸ்வர்யா
லவ் - ரம்யா 
முகமூடி - சென்ராயன்
மேக்கப் ராணி - ஜனனி 
அழு மூஞ்சி - மும்தாஜ் 
குழந்தை - ஷாரிக்
கண்ணாடி - ரித்விக்கா 
ஹாப்பி - யாஷிகா