Now or not Ajith fans have a pleasant surprise

அஜித் ரசிகர்கள் தற்போது அவரது பிறந்தநாளை கொண்டாடிய மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தற்போது ஒட்டுமொத்த தல ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விவேகம்.

படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் படம் வேற லெவலில் இருக்கு என்று, நிச்சயம் அஜித்தை வேற மாதிரி பார்ப்பீர்கள் என்று ஆர்வத்தை தூண்டுகின்றனர்.

நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் விவேகம் படத்தின் டீஸர் வரும் என ஆவலொடு எதிர்பார்த்தனர். ஆனால், அப்படியும் நடக்காததால் ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் ஆனார்கள். அதற்கு பதிலாக பனிப் பிரதேசத்தின் அஜித் மரக் கட்டையைத் தூக்கிக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு போஸ்டர் ரிலீஸ் ஆனது. இப்பதுக்கே அது போதும் என்று ரசிகர்கள் சாந்தி அடைந்தனர்.

இப்போ நமக்கு கசிந்த தகவல் என்னென்னா? விவேகம் டீஸர் வரும் வைகாசி 4 அதாங்க மே 18 ரிலீஸ் ஆகுமாம். என்ன ஹாப்பியா?