'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் - இயக்குனர் வினோத் - தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. 
இந்த படத்துக்கு 'வலிமை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் இந்தப் படத்திற்கான பூஜை எளிமையாக நடந்தது. 

வழக்கமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயெ அதிகம் நடித்துவரும் அஜித், வலிமை படத்திற்காக யங் லுக்கில் தரிசனம் தரவுள்ளார். 
இதில், அவருக்கு போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் படத்தின் ஷுட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. 

குறிப்பாக, அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பதை தேர்வு செய்ய முடியாமல் படக்குழு குழம்பி வருகிறது. இந்தப் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவை வலிமையில் நடிக்க வைப்பதற்காக படக்குழு அணுகியதாம். 

ஆனால், பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக பரிணிதி சோப்ரா நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

எனினும், வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..