no Shruti and Hansika - now is Disha Badani ...

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியாதால் அந்த கேரக்டரில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது நடிகை திஷா பதானி தான் நடிக்கிறாராம்.

வரலாற்று சரித்திரப் படம் ஒன்றை சுந்தர் சி. இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதற்காக தனி பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்று வந்தார் ஸ்ருதிஹாசன்.

திடிரென என்ன நினைச்சாரோ தெரியல, ஸ்ருதிஹாசன் அப்படத்திலிருந்து தானாக விலகிவிட்டார். எனவே, அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. அதில், நடிகைகள் ஹன்சிகா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

ஒரு கட்டத்தில் ‘சங்கமித்ரா’ படம் டிராப் எனவும் செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் தான் ராணி சங்கமித்ராவாக நடிக்க திஷா பதானியை தேர்ந்தெடுத்து உள்ளதாம் படக்குழு.

இந்தப் படத்தை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம் படக்குழு.