தோழா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் காஷ்மோரா. தோழா படத்தில் தமன்னாவுடன் ரொமான்ஸ் காட்சியில் கலக்கி இருந்தார் கார்த்தி.

அனால் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ள காஷ்மோரா படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தாலும், ஒரு காட்சியில் கூட கார்த்தியை ரொமான்ஸ் செய்ய, விடவில்லையாம் இயக்குனர் கோகுல்.

அதிலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும், ஸ்ரீ திவ்யா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லம்மாக அழைக்க படும் நயன்தாரா ரத்தினம்மா தேவி என்கிற ராணி கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர்.

ஆனால் இதில் கார்த்திக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம்.

இந்த படம் பிரமாண்டமான செட்களில் ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், ரொமான்ஸ் இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக இருக்குமாம்.