ஒரு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார் !!

நான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதுமில்லை, தனிக் கட்சி தொடங்கப் போவதும் இல்லை என மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

No politics Mohan lal said

கேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாஜகவில் இணையப் போவதாக நீண்ட நாட்களாக ஒரு வதந்தி நிலவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு மோகன் லால் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

No politics Mohan lal said

இதனிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கப் போகும் சசி தரூருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் மோகன் போடியிடப் போவதாக அந்த மாநில பாஜக தலைவர் ஓ,ராஜகோபால் அண்மையில் தெரிவித்திருந்தார். 

No politics Mohan lal said

ஆனால் மோகன் லால் ரசிகர்கள் அவர் அரசியலில் நுழைவதை சற்றும் விரும்பவில்லை. மோகன்லால் அரசியலில் குதித்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவரது ரசிகர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

No politics Mohan lal said

இந்நிலையில் தான்  அரசியல் கட்சியில் இணையபோவதும் இல்லை என்றும் , தனிக்கட்சி தொடங்கப் போவதும் இல்லை என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார். மேலும் தான்  தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை எனவும் அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

No politics Mohan lal said

மேலும் ஒரு நடிகனாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதாகவும் தனக்கு தன்னுடைய துறை அதிகமான சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் தனக்கு அரசியல் பாடம் சிறிதும் தெரியாது என்றும் மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios