கலைஞர் டிவிக்கு கொடுத்த ஒளிபரப்பு உரிமைக்கான காலம் முடிந்து விட்டதால் கமல் ஹாசன் தாயரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரித்த படங்கள் அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு நேற்று கைமாற்றப்பட்டது.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, நடனம், தயாரிப்பு என திரைத்துறை சார்ந்த அத்தனைத் துறைகளிலும் ஈடுபாடுக் கொண்டு அதை திறம்பட செய்து வருகிறவர். புதிய புதிய யுக்திகளை தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்ததில் க்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம், தனது ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தாயாரிப்பாளராக அறிமுகமானார் கமல். 1987 ல் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற படத்தை சத்யராஜை வைத்து இயக்குநர் சந்தானபாரதி இயக்கி இருந்தார். இந்த படம் தவிர, தனது தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்ற அனைத்து திரைப்படங்களிலும் கமல்  நடித்திருந்தார்.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகளிர் மட்டும், குருதிபுனல், ஹே ராம், நள தமயந்தி, விருமாண்டி, உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்கா வனம் உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனத்தின் படங்கள் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருந்தது. நேற்று  கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து, விஜய் தொலைக்காட்சிக்கு அனைத்துப் படங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவிக்கு கொடுத்த ஒளிபரப்பு உரிமைக்கான முடிந்ததாக தெரிகிறது. இதனையடுத்து விஜய் டிவிக்கு நெருக்கமாகியிருக்கும் கமல், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாகத் தயாரிக்கப்பட்ட படங்கள் சிலவற்றின் ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவிக்கு  அதிகத் தொகைக்கு கைமாற்றிவிட்டதாக சொல்கிறார்கள்.